கெளதம் + காதல்(பகுதி மூன்று)

January 24, 2016 , 0 Comments

- பகுதி மூன்று (விண்ணைத்தாண்டி வருவாயா)
VTV படத்தைப் பார்த்து விட்டு சில நண்பர்கள், "கெளதம் என் கதைய அப்படியே எடுத்து வெச்சிருக்கான்டா?? என் ஆளு அப்படியே ஜெஸ்சி மாதிரி" என்று கூறினார்கள்..பிறகு தான் தெரிந்தது, பல பேர் இப்படியே சொல்லிக்கொண்டு திரிகிறார்கள் என்று...படத்தை குடி போதையில் தொடர்ந்து பத்து நாட்கள் பார்த்துவிட்டு, EX காதலிக்கு ஃபோன் பண்ணி குடைச்சல் கொடுத்த நபரும் எனக்குத் தெரியும்..நீலாம்பரி போல, ஜெஸ்சி தன் வீட்டில் இருந்து வெளிவந்து கார்த்திக்கிடம் "அதான் அப்பவே சொன்னேன் கார்த்திக்..இதெல்லாம் சரி வராதுன்னு..நீதான் புரிஞ்சிக்கல" என்று சொல்லும் சீனையும், பார்க்கில் கார்த்திக், "அவளுக்கு சினிமா....பிடிக்காது.." ன்னு பேசும் காட்சியையும் தேயத் தேய ஓடவிட்டநபர்களும் இருக்கிறார்கள்..அதுதான் ஜெஸ்சி...ஜெஸ்சியில் மேற்சொன்ன "கார்த்திக்" கள் தங்கள் இழந்த காதலியைப் பார்த்தார்கள்...


படத்தைப் பார்க்கும், 45 + நபர்களுக்கு, "என்னங்கடா இவனுங்க..வழ வழனு பேசிக்கிட்டே இருக்காங்க..இங்க உக்காந்து பேசுறாங்க..அங்க உக்காந்து பேசுறாங்க.புடிக்கிதுங்கற, புடிக்கலங்றா, கல்யாணத்த நிறுத்துறா, இவனையும் கல்யாணம் பண்ணிக்க மாட்டேங்குறா..பெரிய இவளா அவ" எனத் தோன்றும்..காரணம், நம் சினிமா காதல்களில், சண்டை போட்டாலோ, காப்பாற்றினாலோ, தலையும் தலையும் மோதிக்கொண்டாலோ, உதடும் உதடும் ஒட்டிகொண்டாலோ காதல் "குபீர்" என முகிழ்க்கும்..பிறகு அது வளர, இருவரும் சேர்ந்து இரண்டு டூயட்கள் பாடினாலோ, ஊர் சுற்றினாலோ போதுமானது..எதிர்ப்பு ஒன்று அப்பாவிடம் இருந்து வரும், இல்லை முறைமாமன், இல்லை ஏதோவொரு EXTRINSIC FACTOR.."காதலுக்கு மரியாதை" படத்தில் லேசாகக் கோடு கிழித்து, காதலர்களின் அகரீதியான திடும் மாறுதலைக் காட்டினார்கள்...அது கூட அவ்வளவு EVIDENT ஆக அல்ல..
காதலிக்கும் பெண், தனக்கே ஒரு வளையத்தைப் போட்டுக்கொண்டு, அதனுள் குழம்பி குழம்பி சுற்றி வந்தால்?? அதுதான் "விண்ணைத்தாண்டி வருவாயா??" கார்த்திக்-ஜெஸ்சி இருவரது வாழ்க்கையின் துண்டுச் சம்பவங்களை பருந்து பார்வையாக பார்த்த உணர்வு தான் படம்..ஏன், கார்த்திக்குக்கு கூட, தன் காதலை META வடிவத்தில் எடுத்துப் பார்த்துவிடத்தானே தோன்றுகிறது..அதை, EX காதலியிடம் போட்டுக் காட்டும் அளவிற்கு மன முதிர்ச்சி உடைய, மேம்பட்ட ஆளாகவும் "காதல்" அவனை சுத்திகரிக்கிறது..ஒருவகையில் பார்க்கும் நம்மையும், முன்னாள் காதலியையோ, இன்னாள் காதலியையோ, எதிர்கால காதலியையோ உருவகப்படுத்த வைத்து, CATHARISIS செய்யும் கருவியாக படம் இயங்குகிறது..
ஜெஸ்சியின் மனநிலையை புரிந்துக்கொள்ள முயல்வது, குழம்பிய தண்ணீரில் நீர்நெளிவுகளை கணிப்பதற்கு சமம்..ஏன் அவள் கார்த்திக்கை முத்தமிட அனுமதித்தாள்?? அதற்கு மறுநாளே வந்து அவனை வறுத்து எடுத்தாள்?? ஏன் கல்யாண இறுதிவரை சென்று வேண்டாம் என்றாள்?? கட்டிப் பிடித்துக்கொண்டு இருக்கும்போதும், "ஒருவேளை இதுதான் கடைசி முறையோ??" எனத் தோன்ற வேண்டும் அவளுக்கு??ஏன் சில SMS கள் வரவில்லை என்றவுடனும், தன்னை கோவா வர வேண்டாம் என்று சொன்னதும், கார்த்திக்கை சடுதியில் உதறினாள்?....
ஒரே முறை தான் கல்யாணம் நின்ற அன்று, கார்த்திக்கைப் பார்க்க வேண்டும் என்று தோன்றுகிறது..அவன் அங்கே வந்தவுடன், " நீ கேட்ல இருந்து திரும்பி பார்த்தப்போ, I FELL IN LOVE..அடுத்த நாள் என்கிட்டே வந்து சொன்னப்போ, அது தெரிஞ்சிடுச்சோனு I FELT ANGRY...ஆனா, ட்ரைன்ல அன்னைக்கு நீ கிஸ் பண்ணப்போ, ட்ரைன் சத்தத்தை விட என் HEART BEAT தான் அதிகமா கேட்டுச்சு..அதான் உன்ன ALLOW பண்ணேன்" என CONFESS செய்கிறாள்..மற்ற காட்சிகளில், படம் எந்த புள்ளியிலும், ஜெஸ்சி மீது JUDGEMENTATIVE ஆக இல்லை..கார்த்திக்கோடு சேர்ந்து நாமும் "காற்றில் ஆடும் காகிதங்கள்" ஆகி ஜெஸ்ஸியின் INDECISIVENSS ஏற்படுத்தும் புயலில் சுழல்கிறோம்..கார்த்திக்கோடு சேர்ந்து, "இந்த உலகத்துல எத்தனயோ பொண்ணுங்க இருக்கறப்போ நான் ஏன் சார் ஜெஸ்சிய லவ் பண்ணே??" என சொந்த வாழ்க்கை ஜெஸ்சிகளை நினைத்து FEEL பண்ணுகிறோம்..
ஒரு SEQUNCE-ல் கார்த்திகோடு சினிமா தியேட்டரில் உட்கார்ந்து இருக்கும்போது கூட, ஜெஸ்சி "FRIENDS" ஆகிடலாம் என்பது போல கேட்பாள்,,,படம் முழுக்க அதே தான் அவளது சந்தேகம்!!! கார்த்திக் என்னும் தன்னை விட இரண்டு வயது குறைந்த வேற்று மத ஆணை, எந்த அளவில் ஏற்றுக் கொள்வது??? நண்பனாகவே?? இல்லை காதலனாகவா??? சில நேரங்களில் தராசு முள் போல, காதலிக்கலாம் என, சில நேரங்களில் நண்பன் என..காதலிக்கலாம் என்றால் தனது வாழ்க்கையின் CULTURAL FOUNDATIONS ஐ அசைக்க வேண்டுமே?? அதுவும் முடியாது..என தரை-நீர் என மாறி மாறி தாவும் மீன் தான் ஜெஸ்சியின் மனம்.."தனக்கு வலியுடன் வாழ பிடிக்கும்" என கார்த்திக் க்கு "ALL IS OVER..PLEASE FORGET ME" மெசேஜ் அனுப்பிவிட்டு அழுவதைப் போல!!!!
கார்த்திக் "ஒற்றைபடை" எண்ணம் கொண்டவன்...COFFEE SHOP ல் மறுபுறம் உட்கர்ந்திருக்கும் ஜெஸ்சியிடம், "இந்த பக்கம் என்னால உட்கார முடியல" என்றும், "கோட்டயத்துல நீ இருக்கும்போது, இங்க எனக்கு உன்ன கிஸ் பண்ணனும்னு தோணிச்சு..எனக்கு 80 வயசாகும் போதும் அப்படித்தான் தோணும்..I WANT TO MAKE LOVE TO YOU ALL TIME"..இதுதான் கார்த்திக்...
இந்த இரு பாத்திரங்களையும்...அவர்களது குணாதிசயங்களின் CARRIER ஆக்கி, இவர்களிடையே சுற்றி சுற்றி பரவும் REPERCUSSIONS ஐ, காட்டியதால் தான் இந்த படம் கௌதமின் ULTIMATE LOVE ஆனது...விட்டுப்போன காதலியைக் குறித்து "என்ன $$$@@## லவ் பண்றோம்?? என்று பாடிய நாயகனை வைத்து இவ்வளவு அழகான காதலைக் காட்டியதற்கே கெளதம் பாராட்டப்படவேண்டியவர் !!!!
"ஜெஸ்ஸி"கள் நிறைந்த உலகில் இந்த படமும், இந்தக் காதலும்...ETERNAL..

0 comments: