சிவகார்த்திகேயனை பாராட்டும் நடிகர் ஆரி

April 03, 2018 0 Comments

ரெட்டைச்சுழி படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமான நடிகர் ஆரி N.கிருஷ்ணா இயக்கிய நெடுஞ்சாலை படத்தில் அவரது நடிப்பை பலரும் பாராட்டினார். நடிகராக அவர் சாதித்து வரும் அதே நேரத்தில், நாம் உண்ணும் உணவின் மீது அவர் கொண்டிருக்கும் அக்கறை சினிமா துறையினரையும், சமூக ஆர்வலர்களையும் வியக்க செய்கிறது. நம் அறிவியல் முன்னேற்றத்தால் சுற்றுச் சூழல் பாதிப்படைவதை பலரும் கண்டித்து வரும் நிலையில் நடிகர் ஆரி நல்ல முயற்சியாக தான் சார்ந்திருக்கும் துறையில் எவ்வாறு சுற்றுச் சூழலை பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்துவது மற்றும் பொதுமக்களுக்கும் இந்த சிந்தனையை உண்டாக்குவது என முனைப்பாய் செயல்பட்டு வருகிறார்.

நம் தமிழ் மக்களும் இயற்க்கை விவசாயத்தின் முக்கியத்துவங்களை அறிந்துக் கொள்கிறார்கள். உணவு முறையிலும் மாற்றங்கள் கொண்டுவர வேண்டும் என முயற்சிக்கிறார்கள்.  மக்களின் இந்த ஆர்வத்தை சரியான பாதையில் கொண்டு செல்ல வேண்டுமென நடிகர் ஆரி மாறுவோம் மாற்றுவோம் எனும் ஒரு அமைப்பை உண்டாக்கி, இயற்க்கை விவசாயத்தின் பயன்கள், அதை தேவை என்ன என்று மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார். அதே போல சுற்றுச் சுழலுக்கு பாதிப்பில்லாத பாரம்பரிய நெர்விதைகளும் பயன்படுத்த விவசாயிகளுக்கு வலியுறுத்தி வருகிறார்.

சென்ற ஆண்டு, ஆகஸ்ட் மாதம் 29-ஆம் தேதி, ஆவனிபூர் திண்டிவனத்தில், மாறுவோம் மாற்றுவோம் அமைப்பின் மூலம் நானும் ஒரு விவசாயி என்ற நிகழ்வில், பாரம்பரிய கத்தரி விதைகள் ஆளுக்கு இரண்டு வீதம் ஒரே நேரத்தில் நடப்பட்டது. இந்த நிகழ்வில் கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் என 2683 பங்கேற்பாளர்கள் பங்கு பெற்று கின்னஸ் சாதனையும் படைத்தனர்.

சமீபத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான வேலைக்காரன் திரைப்படத்தில், உணவை பதப்படுத்த பயன்படுத்தும் ரசாயனங்களால் ஏற்படும் விளைவுகளை பற்றி மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தியதால் நடிகர் ஆரி சிவகார்திகேயனையும் வேலைக்காரன் படக்குழுவினரையும் பாராட்டியிருக்கிறார். அப்போது தமிழ் திரைப்பட இயக்குனர்கள் இயற்க்கை விவசாயத்தை மையமாக வைத்து திரைப்படங்களை உண்டாக்க வேண்டும் என்றும் அப்படியான கதைகளில் முன்னணி கதாநாயகர்கள் நடிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்த நடிகர் ஆரி, தானும் நடிக்க ஆர்வமாக இருப்பதாகவும் தெரிவித்து இருக்கிறார்.

0 comments: