கெளதம் + காதல் (பகுதி இரண்டு)

January 24, 2016 , 0 Comments

-பகுதி இரண்டு (வாரணம் ஆயிரம்)
கௌதமின் காதலன் ஒரு வித்தியாசமானவன்...உடல் சார்ந்த இச்சைக்காக, பெண்ணை மடக்கி ஆக வேண்டிய அகஅரிப்புக்காக, இன்ன பிற லௌகீக சந்தோஷங்களுக்காக காதலிக்காமல், "காதல்" என்ற இன்பத்துக்காக, வாழ்நாள் முழுக்க காதலிக்கும் பொருட்டு காதலிக்க முனைபவன்..அவனுக்கு காதல் மீதுதான் காதல்..அவன் குடும்பத்தில் காதல் அவனது பெற்றோர்களுக்கு இடையே ஊடுபாவ ஓடிக்கொண்டிருக்கும்...அக்காதலை, அடி முதல் பகிர்ந்துக்கொள்ள பெற்றோர்களும் வாய்த்திருப்பார்கள்...அவனது அப்பா அவனுக்கு ரோல்மாடல்..அவர் செய்த காதலை இவனும் செய்ய வேண்டும்..இந்த நீர்க்குமிழி போன்ற காதல் ஒரு RANDOM பெண்ணைப் பார்த்தவுடன் முகிழ்க்கும்...காதல் என்பதை மறைபொருளாக, மற்ற விஷயங்களின் நடுவே திடுமென தெறிக்கும் மணிரத்னம் வகைமாதிரி இல்லாமல் காதல் என்பது வாக்கிங் செல்வது போல, காஃபி குடிப்பது போல, சினிமா பார்ப்பது போல ஒர் அனுபவித்து செய்ய வேண்டிய செயல்பாடு..


இதனாலே கௌதமின் காதலர்களும்..ஏன் கௌதமே கூட ELITIST வகையறாவாகத் தோன்றும்..யோசித்துப்பாருங்கள், மூன்று வேளை சாப்பாடே கிடைக்காத ஒருவன், எப்படி மூச்சு முட்ட காதலிப்பான்?? அவன் வேலைக்கு சென்று தான் குடும்பத்தை காப்பாற்ற வேண்டும் என்பவன் எப்படி மூழ்குவான்?? போய் காதலைத் தெரிவித்தவுடன், "இல்ல..எங்க அப்பா பாக்குற பையனைத் தான் நான் கல்யாணம் பண்ணிக்குவேன்", "நீங்க என்ன CASTE??", இன்னபிற கேள்விகளை வீசும் பெண்களை (இயல் வாழ்க்கையில், அதுதான் கதி என்றாலும்) FULL JOSH ஓடு அணுகினாலும், காற்று போன பலூன் மாதிரி தானே ஆகுவோம்..SO, கௌதமின் காதலர்களுக்கு EXTRINSIC PRESSURES, LIVELIHOOD SHORTCOMINGS அறவே கிடையாது (விடிவி தவிர)..காதல் என்பது இருவரது, இருவர் மட்டும் உணரக்கூடிய ஆத்மார்த்த உணர்வு..100% UNADULTERED LOVE WITH NO CONFOUNDING FACTORS..
காதலை பார்வையாளரிடம் கடத்துவது எப்படி?? அதற்கு கெளதம் பயன்படுத்திய உத்தி, MONOLOGUE... சினிமா பாஷையில் VOICE OVER..ஒருவனது அகரீதியான காதல் உணர்வை சொல்ல, பார்வையாளர்கள் - கதாபாத்திரம் இடையே உள்ள நுண்திரையை தகர்த்து, அதாவது BREAKING THE FOURTH WALL..என உரையாடுவது..மேக்னாவை சூர்யா பார்த்த, பார்த்தவுடன் காதலில் விழுந்த நொடியை அப்படியே பரிமாறுவது.."அந்த நிமிஷம்..அந்த நிமிஷம் டாடி..ஒரு தண்டர்போல்ட் மாதிரி, அம்மா மேல உங்களுக்கு லவ் வந்த மாதிரி..ஒரு இளையராஜா பாட்டு மாதிரி.." என அந்த TRAIN SEQUENCE எபிக் ஆனது இப்படிதான்..பார்க்கும்போதே, சமீரா ரெட்டியை (பின்னாளில் நாம் தெறித்து ஓடிய அதே சமீராவை) நாமே காதலிக்கும் பிரமையை ஏற்படுத்துவது..
PROPOSE செய்ய கெளதம் நாயகன் யோசிப்பதில்லை..நேரடியாக, I WILL SWEEP OFF YOUR FEET என்று தன் மேல் உள்ள நம்பிக்கையில், தான் சிறந்த காதலன் என்ற நம்பிக்கையில் சொல்வான்..ஆனால், "வாரணம் ஆயிரத்தில்" கெளதம் "அலைபாயுதே" தாக்கத்தில் PURSUIT OF LOVE அதாவது காதலைப் பொருட்டு எவ்வளவு தூரம், எந்த மூலைக்கும் செல்லலாம் என வகைமை ஏற்படுத்தினார்.."கலிஃபோர்னியா...இங்க இருக்கு" என அவன் அப்பா சொல்ல, காதலை தேடி, அலைந்து, வெளியுலகில் பைத்தியகாரத்தனம் என சொல்லக்கூடிய ஒன்றை, அதுவும் ஒரு RANDOM LOVE AT FIRST SIGHT க்காக செய்வான்..அங்கே, தன் காதலியுடன் நேரம் செலவிட்டு, காதலைப் பெறுவான்..தன் காதலை மேக்னா சொன்னவுடன், "இங்க என்கிட்டே உனக்கு கொடுக்க எதுவுமே இல்ல.." எனத் தேடி அழகான பூக்களைப் பறித்து தரும் காட்சி...ம்ம்..டிவைன்..
பின், நடப்பவை எல்லாம் கதையின் ஓட்டத்தில் ஓடக்கூடிய சம்பவங்கள்...ஆனால், படம் எப்படி இருந்தாலும் அந்த அழகான பூக்களைப் போன்றொரு காதலை நம்மால் இன்று வரை நினைவில் வைத்துக் கொள்ள வைத்ததே கௌதமின் காதல் மேலுள்ள காதல் தான்..
கௌதமின் MAGNUM OPUS "விண்ணைத்தாண்டி வருவாயா??" வை வேறொருபதிவில் காண்போம்..

0 comments: