கத்தி விமர்சனம்

October 24, 2014 , , 0 Comments

வெறும் கதையாகக் கேட்டால், ஏதோ ம.க.இ.க. பிரச்சார காணொளி போலத் தோன்றும், கதையை அப்படியே ப்ரெசென்ட் செய்தால், அதுவும் விஜய் போன்ற ஒரு மசாலா ஹீரோவை வைத்துக் கொண்டு...இதுதான் முருகதாஸ் மனதில் இருந்த கேள்வியாக இருக்கும்..இதை எப்படி ப்ரெசென்ட் செய்யலாம்??

“கத்தி” படத்தின் திரைக்கதை மூன்று தளங்களில் பகுக்கலாம்..முதலில், கதிரேசன் விஜயை ESTABLISH செய்ய வேண்டும்..அதற்கு ஒரு சம்பவம்..பின்னர், ஹீரோயின் அறிமுகம்...காதல், பாடல்கள்..(இவை கட்டாயம் “திணிக்கப்பட்டவை”...இவற்றை அப்படியே வெளியே தூக்கி கடாசினாலும் கதையில் எவ்வித மாறுதலும் இருக்காது)...இந்த காட்சிகளில், விஜய் சற்று OVERDO செய்திருக்கிறார்..அது சற்று எரிச்சலையும், கதையில் ஒன்றாமையும் ஏற்படுத்துகிறது...ஆனால், சட்டென்ற திருப்பம்...விஜய் ஜீவானந்தம் இடத்தை வகிக்க ஆரம்பித்தவுடன் கதை ஒரு சட்டகத்துக்குள் வருகிறது...
கதிரேசன், உண்மையை அறிந்துக்கொண்ட ஃபிளாஷ்பேக் காட்சிகள், பார்ப்பவர்கள் “முகத்தில் அறைய வேண்டும்” என்ற நோக்கத்தில் அமைக்கப்பட்டு, அதில் ஓரளவு வெற்றியும் பெறுகிறார்கள்....ஜீவானந்தம் (கம்யூனிஸ்ட் குறியீடு) ம.க.இ.க. கட்சி நபரை பிரதிபலிக்க முயற்சி செய்து...ஷோல்டரை ஏற்றாமல், குரலை உயர்த்தாமல் அடக்கி வாசித்திருக்கிறார்...
பழைய “எங்க வீட்டுப் பிள்ளை” ஃபார்மேட் தான்....ஆனால் கதிரேசன் விஜய் ரொம்பவும் பில்ட்-அப் செய்யாமல், எந்த துதி பாடலும் இல்லாமல், அறிவை பயன்படுத்தி “அடியாட்களை” வீழ்த்துவது,,,குறிப்பாக காயின் சண்டை “செம” 
இடையில், வில்லன் வந்து, ஒரே வசனத்தை ஒரே முகபாவத்தோடு பேசுகிறார்...வழக்கமாக முருகதாஸ் அவரது படங்களில் “வில்லன்” கேரக்டரை, நாயகன் எவ்வளவு ஸ்மார்ட்டாக உள்ளாரோ அதே அளவு ஸ்மார்ட்டாக அல்லது பவர்புல்லாக படைப்பார்...அதனாலே, திரைக்கதை சுவாரசியமாக அமையும்...ஆனால், ரமணாவில், விஜயன் சற்று நேரமே வருவார்..அங்கு “சூழலே” வில்லன்..அதே போல “கத்தியில்” “மீடியாவின் கவனத்தை தங்கள் மீது திருப்புவது” மட்டுமே” சூழல் அல்லது இலக்கு...வில்லனின் அவசியம் அதனால் குறைவு.. 
இரண்டாம் பாதி முழுக்க, முன்னர் சொன்ன அந்த இலக்கை நோக்கியே நகர்வதால், பிரஸ் மீட் முடிந்தவுடன், படம் முடிவை அடைந்துவிட்டது...அதற்கு பின், ஹீரோ – வில்லன் மோதலை ஏற்படுத்தவேண்டும் என்ற கட்டாயத்தின் பேரில், ஒரு சண்டை வைத்ததாக தெரிகிறது..ஆனால், ஏர், கலப்பை, சக்கரம் கொண்டு சண்டை அமைத்திருப்பது சற்று ஆறுதல்..
இந்த தெளிவான இலக்கின்மை மட்டுமே, படத்தின் திரைக்கதையை சற்று மந்தமாக ஆக்கியுள்ளது...இன்னொரு மைனஸ், வலுவில்லாத சமந்தா பாத்திரம் மற்றும் நன்றாக இருந்தாலும், திணிக்கப்பட்டவையாக தோன்றும் பாடல்கள்.. 
முருகதாஸ் எடுத்துக்கொண்ட கரு, கார்பரேட் வெர்சஸ் கம்யுனிசம் தான்...ஆனால் வறட்டு கம்யூனிஸம் வேலைக்கு ஆகாது...புத்தியுடன் கூடிய வெகுஜன அரசியல் திசைதிருப்பல் மட்டுமே போராட்டங்கள் வெற்றி பெற இயலும், வெறும் “அறப் போராட்டத்தை” காவு வாங்க எத்தனை சக்திகள் வரும் என்பதையும், விஜய் என்னும் வெகுஜன ஊடக நாயகனைக் கொண்டு சொல்லியிருக்கிறார்...விஜய் இல்லாமல் இந்தப்படம் பெரிதாக “செல்ஃப்” எடுக்காமல் சாமுராய் போன்ற படங்கள் அளவே போயிருக்கும்...விஜய்க்கும், முருகதாஸ் போன்ற கூரான வசனங்கள், வலுவான கதை எழுதாத இயக்குனர் கிடைக்காவிட்டால், இது ஒரு மாபெரும் தோல்வி படமாக இருந்திருக்கும்...
எடுத்துக்கொண்ட வலுவான கதையை, லாஜிக், சற்றே மந்தமான திரைக்கதை உடன் சொன்ன விதத்தில், முருகதாஸ் எந்தளவுக்கு வெற்றி பெறுவார் என்று தெரியவில்லை....ஆனால், சம காலஅரசியலை, “தண்ணீர் தண்ணீர்”, “நீராதிபத்தியம்” போன்ற புத்தகங்கள் செய்ததை புரிய வைக்க எடுத்துக் கொண்ட முயற்சி என்ற அளவில் கட்டாயம் பாராட்டலாம்...வெகுஜன படத்தில், மாஸ் ஹீரோவின் ரசிகர்களையும் கணக்கில் கொள்ள வேண்டிய அவசியத்தில் சிற்சில தவறுகள் நேரவே செய்யும்...ஆனால், ஊரை ஏமாற்றி உலையில் போடும் படங்கள் மத்தியில், சமூக அக்கறை பேசும் படங்கள் வரவேற்கவேண்டியவை..

-தினேஷ்

0 comments: