கெளதம் + காதல்
-பகுதி ஒன்று
கௌதமைப் பற்றி எழுதக் கூடிய MINDSET ல் இல்லாவிடினும், இன்று சுந்தர் ஸ்ரீனிவாஸ் எனும் கௌதம் "உபாசகர்" எழுதிய பதிவைப படித்து INSPIRE ஆகி எழுதி மனதில் அலையாடும் எண்ணங்களை பதிவு செய்ய எழுதுகிறேன்..
இயக்குனர் மகேந்திரன் ஒரு பேட்டியில், "உலக அளவுல எவ்வளவோ மாறிடுச்சு..நம்மூர்ல என்னன்னா காதலை எப்படி சொல்றதுங்கறலேயே இன்னமும் படம் எடுத்துகிட்டு இருக்கோம்..வெளிநாட்டுலேருந்து யாராச்சும் பாத்தாங்கன்னா இவனுங்களுக்கு இதைத் தாண்டி வேற பிரச்சினையே கிடையாதான்னு தான் நினைப்பாங்க" என்றார்..ஆனால் பாருங்கள், இன்றும் CRUSH என்ற விளங்கவியலா உறவை நினைத்து மருகும் எண்ணற்ற பதிவுகளை நூற்றுக்கணக்கில் பார்க்கிறோம்..மேலைநாடுகள் அளவிற்கு "கட்டற்ற" காதலும் அதன் உடல் சார்ந்த தணிதலும் இங்கு சாத்தியப்படாதவரை, பெண்களிடம் பேசவே "பேபேபே" என குளறும் ஆண்கள் உள்ளவரை, திருமணம் என்ற ஒற்றைவாசல் வழி மட்டுமே பெண்களை ஓரளவு அறிய முடிந்த பெரும்பான்மை ஆண்கள் உள்ள வரை "காதல்" தான் இங்கே செல்லுபடியாகும் முக்கிய கச்சாப்பொருள்..
காதல் என்பது 80- களின் இயக்குனர்களுக்கே ஒரளவு பிடிபட்டது..எம்.ஜி.ஆர் சரோஜாதேவியின் தோள்பட்டையை அமுக்குவதும், தன் உதட்டை கடித்துக் கொள்வதும், சிவாஜி முகத்தால் மட்டுமே காதலிப்பதும் காதல் இல்லையா?? என நீங்கள் கேள்வி எழுப்பினால், உங்கள் வயது APPROXIMATELY 60 என எடுத்துக் கொள்ளலாம்...
தமிழ் சினிமாவின் காதல் வரலாற்றை அப்படியே SKIP செய்து, மணிரத்னம் என்ற இளைஞரின் வருகையை கணக்கில் கொண்டால் (அதற்கு முன் ஸ்ரீதர்) அது வரை "காதல்" பெயரளவில் மாத்திரம் இருந்தது..மணிரத்னமும், "மௌனராகம்", ரோஜா, பாம்பேயில் சில காட்சிகள், அலைபாயுதே தவிர்த்து மிதியில் PLASTIC பூக்களையே செய்தார்..மணிரத்னத்தின் காதல் குறித்த பார்வையை வேறொரு பதிவில் பார்ப்போம்...பிறகு ஏன் அவரை MENTION செய்தேன் என்றால், "அலைபாயுதே" வில் மாதவன் ஷாலினியைத் தேடி கேரளா சென்று அங்கே "காதலை" ஸ்பரிசிக்கும் ஏகாந்த காட்சியில் INSPIRE ஆனா இளைஞன் ஒருவன் பின்னாளில்,காதலை தனது பிரத்யேக அடையாளமாகக் கொண்டு படம் எடுக்க வந்தான்..அவன் கெளதம்..
முதல் படமான "மின்னலே" என்னளவில் புறவயமாகவே காதலை சொன்னது..ரீமாவின் மாதவன் மீதான காதலுக்கு CONFLICT..மாதவன் வேறு அடையாளத்தில் வந்தது..கிளைமாக்ஸ் கூட அக்காலத்தில் பரவலாகப் பயன்படுத்தப்பட்ட ஒன்றுதான்..காதல் காட்சிகள் FRESH ஆகத் தெரிந்தது, படத்தில் பூத்துக் குலுங்கிய இளமை இரண்டும் PROMINENT ஆகத் தெரிந்தது..
இரண்டாம் படமான, "காக்க காக்க" வில் தான் NEW FORM OF ROMANCE தென்பட்டது...மையக் கதை வேறு என்றாலும் அன்புச்செல்வன்-மாயா, இருவர் இடையிலான காதல், அது அரும்பிய விதம், எந்தப் புள்ளியில் தான் காதல் வயப்பட்டிருப்பதாக அன்புச்செல்வனுக்கு புரிகிறது, அதனை வெளிபடுத்தும் விதம், ஏன் தன்னை புடித்தது என்ற கேள்விக்கு " ITS A WOMAN THING" என்று மாயா சொல்வது, "இப்படியே இருக்கணும் போலத் தோணுது" என மாயா சொல்லும் தருணம் என ஒருவித MATURED LOVE க்கு தமிழர்களை அறிமுகப்படுத்தினார்..
அடுத்து, "வேட்டையாடு விளையாடு" வில் MATURED ROMANCE ன் அடுத்த பக்கத்தை புரட்டினார் கெளதம்..ராகவன் ஆராதனாவை சந்திக்கும் முதல் காட்சியில் அவள் தற்கொலைக்கு முயல்வாள், பின்னர் மெல்ல மெல்ல பழக்கம் ஏற்படும், பரஸ்பரம் இருவரும் புரிந்து..அதாவது ஆராதனாவை ஏற்றுக்கொள்ள ராகவன் முன்வரும் பொது, அவளுக்கு, தயக்கம்...தமிழ் சினிமாவில் அதுவரை SEPARATED WOMEN கள் அனுதாபத்துக்கு உரியவர்கள்..நாயகன் பாதுகாக்கவே படைக்கப்பட்டவர்கள்..அவர்களுக்கு முடிவெடுக்கும் அதிகாரம் அரிதாகவே கிடைக்கும்..இதில் ராகவன் வேண்டுகோள் விடுப்பதும் அதனை ஆராதனா அணுகுவதும் ரொம்பவே MATURED..இறுதியில், அவர்கள் சேர்வதும், எந்த "திடுக்" திருப்பமும் இல்லாமல் மரத்தில் இருந்து இலைகள் விழுவது போலவும், பூ விரிவது போல இயல்பாகக இருந்தது...
"பச்சைக்கிளி முத்துச்சரம்" இயல்தளத்தில் இருந்து விலகி ரொம்பவே EXOTIC ஆக இருந்தது..காரணம், "DERAILED"...சில காட்சிகளைத் தவிர கெளதம் முழுதும் வெளிவரவில்லை..
இதுவரை கெளதம் காதலை அணுகியது ஒரு PATTERN. இந்த வடிவமைப்பில் இருந்து மேலெழும்பி வேறு PATTERN க்கு சென்றதைப் பற்றி அடுத்த பதிவில் காண்போம்..
Gautham's Filmography -
http://www.woodsdeck.com/person/1448-gautham-menon
0 comments: