சிவகார்த்திகேயன் - மாற்றுப் பார்வை
சினிமாவில் ரஜினியும், விஜயும் அடைந்த வெற்றியை சமூக ரீதியாகப் பார்த்தால் சில பொதுக் காரணிகளைப் பார்க்க முடியும்... குறிப்பாக விஜய்க்கு boy next door appearance பெரிய ப்ளஸாக 90-களில் இருந்தது.. அது மட்டுமே போதாது அல்லவா?? நடனம், காமெடி, வெகுஜனத்தை குறிப்பாக குழந்தைகளை ஈர்க்கும் உடல் மொழி ஒரு சேர அமைந்ததால் ஒரு பெரிய fan base பெற்று மாஸ் ஹீரோவாக அமர்ந்து விடுவார்... ஏன் மோகன், பிரசாந்த், சத்யராஜ், ஆர்யா, ஜெயம் ரவி உள்ளிட்டவர்கள் மாஸ் ஹீரோவாக உருவாக முடியவில்லை என்று பார்த்தால் மேற்சொன்ன பொதுக் கூறுகளில் ஏதோ ஒன்று குறைந்திருக்கும்...
2005-க்குப் பிறகான நாயகர்கள் தங்களை பிரதேச அடிப்படை அடையாளங்களுக்குள் பொருத்திக் கொண்டனர்.. தனுஷ், வட / மத்திய சென்னை கீழ் நடுத்தர வர்க்க பிரதிநிதியாகவும், விஷால், 'மதுர' கோபக்கார இளைஞராகவும் ஒரளவு நிலைபடுத்திக் கொண்டனர்... சசிகுமார் கூட நான்கே படங்களில் மதுரை / சுற்றுபுற ஆதிக்க சாதி இளைஞராக தன்னை நிலைநிறுத்தி வணிக ரீதியாக வெற்றி கண்டார்.. விஜய், "திருப்பாச்சி" படத்தில் மட்டும், இதைக் கையாண்டு பின் கை விட்டு விட்டார்.. விஜய், இந்த ' பிரதேச ' அடையாளத்தை நிறுவி இருந்தால், இந்நேரம் எங்கோ போயிருப்பார்..
இது புதிதான விஷயமன்று, 'முரட்டுக்காளை'யில் ரஜினி, பின்னர் கிராமிய படங்களில் விஜயகாந்த், 'கொங்கு' பிரதிநிதியாக சத்யராஜ் ஆகியோர் தங்களை அப்பிரதேச நாயகனாக நிறுவிக் கொண்டனர்..குறிப்பாக சத்யராஜ் தனது படங்களில் அதைத் தொடர்ந்து நிறுவினார்..
தற்காலத்துக்கு வந்தால்.. விஷால், சிவகார்த்திகேயன் இருவரும் இதை வெற்றிகரமாக (தன்னிச்சையாக) செய்து வருகின்றனர்.. கார்த்தி - கொம்பனில் செய்தார்..
சிவகார்த்திகேயனை எடுத்துக் கொண்டால், திரைத்துறையில் நுழையும் முன்பே "நம்ம வீட்டு பையன்" அடையாளத்தையும், காமெடி, மிமிக்ரி, நடனம் என சகல கூறுகளையும் நிறுவி விட்டார்.. யாருக்கும் கிடைக்காத "பூஸ்டர்" இது.. ஆனால், இப்போது நாம் பார்க்கும் 'ஒபனிங்' வர என்ன காரணம்???
1. எதிர் நீச்சல் - சென்னை நடுத்தர இளைஞன், அதற்கு மேற்சொன்ன இமேஜ் போதும்..
2. கேடி பில்லா கில்லாடி ரங்கா - திருச்சி கீழ் நடுத்தர வேலையில்லா இளந்தாரி இளைஞன்.. படம் மொக்கையாக இருந்தாலும், மேற்சொன்ன emotional connectivity மற்றும் காமெடியால் ஒரு பிடி உயர்ந்தார்..
3. வ.வா.ச. - தேனி இளந்தாரி... B & C ரசிகர்களைக் கொத்தாக கவ்வியது இங்கே தான்..nativity விஷயம் முழுமையாக செயல்பட்ட படம் இது..
4. மான்கராத்தே - வட சென்னை இளந்தாரி... மிக மோசமாக, அதாவது வட சென்னைக்கு சம்பந்தமே இல்லாமல் எடுக்கப்பட்டதாலும், பலவீனமான திரைக்கதையாலும் 'பீட்டர்' ஒட்டவில்லை
5. காக்கிச்சட்டை - அடையாளம் நிறுவப்படவில்லை + முதிரா மாஸ் முயற்சியாதலால் நாயகன் ஒட்டவில்லை
6. ரஜினி முருகன் - 3 த் திரும்ப செய்தார், மதுரை பின்புலத்தில்.. செமயாக ஒர்க் - அவுட் ஆகி விட்டது.. கூடவே ' லேசான ' சாதி அடையாளமும்....
தொடர்ந்து எப்படி செயல்படுகிறது என்பதை வைத்து அவரது அடுத்தக் கட்ட வளர்ச்சி நிர்ணயம் ஆகும்
- Dinesh
Sivakarthikeyan's Filmography - http://www.woodsdeck.com/person/272-sivakarthikeyan
0 comments: