“மௌனராகம்” கார்த்திக்கை ஏன் பெண்களுக்கு பிடித்தது/பிடிக்கிறது??

January 06, 2016 , , 0 Comments

காலகாலமாக கேட்டு வரும் கிளிசே தான் “எனக்கு மௌன ராகம் கார்த்திக்கை பிடிக்கும்”, “எனக்கு அது மாதிரி ஒரு லவ்வர் தான் வேணும்”, “ஐ லைக் ஹிம் சோ மச்”...இதனை வாசகர் கடிதம் எழுதிய காலத்து பெண்கள் முதல்...ட்விட் போடும் பெண்கள் வரை சொல்வதைக் கேட்டு அலுத்துப் போய், “அப்படி எதனாலதான் இந்த கிரேஸ்???” என்ற உற்றுநோக்கலே இந்தப் பதிவு...
ஒரு நிமிடம் உங்களை 1986–க்கு, அதாவது மௌனராகம் வெளியான காலத்திற்கு உங்களை ரீவைண்ட் செய்து பாருங்கள்...எப்படிப்பட்ட ஹீரோக்களை பார்த்து இருப்பீர்கள்?? ஒன்று ரஜினி வந்து, “அடங்காப்பிடாரி பொண்ணுங்க கூட ஆம்பள கை பட்டவுடனே அடக்க ஒடுக்கமா மாறிடுவாங்க” என்று ஸ்டைலாக திமிர் பிடித்த நாயகிகளை (அதாவது...ஸ்கர்ட் போட்டு, கூலிங்கிளாசோடு, காரில் வருபவர்களை) “அடக்கி” அடுத்த காட்சியிலே நீண்ட ஜடை, நெற்றிக் குங்குமம், தழையத் தழைய சேலை என “மாமனுக்கு” சோறு கொண்டு போக வைப்பார் (நல்லவேளை...பெண்ணியவாதிகள் அப்போது பிறக்கவில்லை)
இல்லை, கமல் வந்து சேஷ்டைகள் செய்து திகட்ட திகட்ட காதலில் ஆழ்த்துவார்..கூடவே கெட்டிக்காரத்தனமும், தந்திர பேச்சும், “நான் ஒரு சராசரி அல்ல” என்ற மிதப்பும் இருக்கும்...எப்படி தன்னை DOMINATE செய்யும் ஆண்களை ரஜினி ரசிகைகள் விரும்பினார்களோ, தனக்கு இடமே அளிக்காமல் காதலிக்கும் ஆண்களை கமல் ரசிகைகள் (சிட்டி கேர்ள்ஸ்) விரும்பினார்கள்...., FOR THE TIME BEING மீதம் உள்ள நாயகர்களை விட்டுவிடலாம்..
இந்த சூழலில் வந்து இறங்கினார் மணிரத்னம்...நிறைய இன்ப்ளுயன்ஸ் + கட்டுப்பாடான வளர்ப்பு சூழல் என முரண்பட்ட சூழலில் வளர்ந்த அவர், ஒரு காதலன் ரோலை உருவாக்கினர்...அது கார்த்திக்...அது அன்றைய நாவல்களின் கதாநாயகன் அடிப்படையில் அமைந்தது...(பெண்கள், இக்காலத்தில் தான் பல நாவல்களைப் படித்து, தங்கள் ஆதர்ச காதலனை வரித்துக் கொண்டிருந்தனர்)
இந்த காதலன், குழந்தையை தூக்கி போட்டு அதை “வீல்” என கத்த விட்டு பிடிக்கும் ECCENTRIC நபர். அவன் கொடுக்கும் QUIRKY THRILLS–ம், அடுத்து என்ன செய்வான் என்ற UNPREDICTABILITY–ம், காதலிக்கு பிகு காட்டி அடங்கும் பாங்கும், அன்றைய ANGRY YOUNG MAN –ஆக இருந்தும் காதலியிடம் குறும்பு செய்யும் கள்வனாகவும், போலீசில் அடி வாங்கி அந்த நேரத்திலும் கண்ணடிக்கும் ஆளாகவும் இருந்தான்...பெண்களைப் போன்று சல சலவென பேசும், காதலியை விரட்டி விரட்டி இக்கட்டில் சிக்க வைத்து “ஐ லவ் யூ” கேட்கும் LOVABLE IDIOT, SWEET RASCAL…
இதில் அவன் வரும் நேரமும் மிகக் குறைவு...ரேவதி கார்த்திக்கை திருமணம் செய்து கொள்வதைப் போல காட்டி இருந்தால், இம்மாதிரி ஒரு ECCENTRIC நபருடன் வாழ முடியுமா என்ற கேள்வி எழுந்திருக்கும்...
ஆனால், இந்த பாத்திரம் தான் இவ்வகையின் PROTOTYPE என்ற அடிப்படையில், மணி ரத்னத்தின் காட்சி படுத்தல் அழகியலும், கார்த்திக்கின் BUBBLINESS-ம் சேர்ந்து, இந்த பாத்திரத்தை “EVERGREEN” ஆக்கிவிட்டது...இல்லாவிட்டால், அம்மா-மகள் இருவரும் ஆசைப்படும் வகையில் காலத்தைத் தாண்டி நிற்க முடியுமா???

0 comments: