Selvaraghavan - A lone wolf seeking redemption
தமிழ் சினிமாவில் "செக்ஸ்" காட்சிகளை பல பரிமாணங்களுடன் எடுத்த நபர் என்றால் அது செல்வராகவன் தான்.. கலர் சினிமா வந்த காலம் முதல் "செக்ஸ்" காட்சிகள் இடம் பெற்று வந்தாலும், அவை காதலின் உச்சத்தில் நிகழ்வதாகவும், கற்பழிப்பு சம்பந்தப்பட்டதாகவும், பெண்ணை ஏமாற்றவும் என குறிப்பிட்ட நோக்கத்துக்காக வைக்கப்பட்டே வந்தன.. கூடவே பூ - வண்டு, புலி-மான் போன்ற குறியீட்டுக் கலவையாகவே இருந்து வந்தன.. "ரா" வான காட்சிகளைக் காணவே ஃபிலிம் பெஸ்டிவல்களுக்கு சிலர் செல்லக் கூடும் என சுஜாதா தனது சிறுகதையில் குறிப்பிட்டு இருந்தார்.
அதை கதைக்கு வலுவூட்டும் வகையில் 7 Gயில் வைத்திருந்தார்... கதைப்படி தன்னை விரட்டி விரட்டி காதலித்து, தன்னால் வாழ்க்கையில் செட்டில் ஆன காதலனுக்கு, தன் வீட்டார் ஒப்புக் கொள்ளாத நிலையில் "தன்னை வழங்குதல்" என்ற முடிவுக்கு வரும் நாயகி அந்த காலத்தில் அதிர்ச்சி மதிப்பீடாக அமைந்தது... அதனால் தான் சோனியாவின் மரணம் பார்ப்பவர்களை நிலைகுலைய வைத்தது.. ரவிகிருஷ்ணாவும் அவரை கற்பனையில் உருவகப்படுத்தி வாழ்க்கையைத் தொடர்வதாக காட்டியதற்கு அக்காட்சி தரும் அழுத்தம் போதுமானதாக இருந்தது..
அவரது "மாஸ்டர் பீஸ் " படமான "புதுப்பேட்டை"யில்.... காட்சியமைப்பில் உச்சத்தைத் தொட்டிருப்பார்.. விலைமாது சினேகாவிடம் செல்லும் தனுஷ் முதல் முறை தயங்குவார்.. அப்போது சினேகா ஏளனமாகப் பார்ப்பார்.. தனுஷ் ஒரு கொலைக்குப் பின் அதே சினேகாவை அணுகும் விதம் மாறும்.. செக்ஸ் என்பதை அதிகாரத்தை நிரூபிக்கும் களமாக அது மாறும்.. அப்போது சினேகா தனுஷைப் பார்க்கும் பார்வையின் மாறுதல் மிக அழகாக காட்சிப்படுத்தப்பட்டிருக்கும்.. பிறகு சினேகாவை விடுவிக்க கோரி முறையிடும் போதும், அதற்கு முந்தைய காட்சியிலும் "அதிகாரம்" சார்ந்த முனனப்பே அதிகரிக்கும்.. அந்த அதிகாரம் போதையாக மாறி யார் மீதும் பிரயோகப்படுத்தலாம் என்ற நிலையில் சோனியாவை மிரட்டி பணிய வைப்பது என செக்ஸ் என்பதை அதிகாரப் படிநிலையை காட்ட பயன்படுத்தினார்.. (மலையாளத்தில் 21 ஃபீமேல் கோட்டயம்.. "செக்ஸ்" என்பது ஒரு ஆயுதம் என்ற கருத்தியலில் அமைந்த படம்)
"ஆயிரத்தில் ஒருவனில்" சிருங்காரம் கலந்த தூண்டலை ரீமா பார்த்திபன் மீது, அவரை வீழ்த்தப் பயன்படுத்துவார் ..." இரண்டாம் உலகம்", "யாரடி நீ மோகினி" படங்களில் பெரிதாக சொல்ல எதுவுமில்லை.." துள்ளுவதோ இளமை" யில் பதின்வயது செக்ஸ் காட்சிகளையும், "காதல் கொண்டேன்" ல் சிறார் செக்ஸ் சுரண்டல் எனவும் காட்சி படுத்தினார்..
வேறு எந்த இயக்குனரும் சொல்ல முயலாத கோணங்களைக் கையாண்டவர் செல்வராகவன்..(பாலச்சந்தர் இதில் ஒற்றைப்பைடை பார்வை கொண்டவர்.. பாலு மகேந்திரா இலக்கியம்சார் பிறழ்வு முறை பார்வை கொண்டவர்.. மணிரத்னம் அழகியலில் மட்டும் கவனம் கொண்டவர்)
Checkout Selvaragavan's profile - http://www.woodsdeck.com/person/951-selvaraghavan
0 comments: