கெளதம் + காதல் - இறுதி பகுதி (நீதானே என் பொன்வசந்தம்)

January 31, 2016 , 0 Comments

படைப்புகளில் TYRANNY OF TRIVIA என்ற அம்சம் ஒன்று உண்டு..ஒரு தொகுப்பின் முதல் அத்தியாயம் ஏற்படுத்தும் கிளர்ச்சியை மீண்டும் மீண்டும் செய்தால்..அல்லது ஒரு MAGIC ஐ மறுபடி மறுபடி செய்தால் அது முதலில் ஏற்படுத்திய வசீகரத்தைத் தக்க வைக்காது என்பது போல..இந்தத் தொடரை உதாரணமாக எடுத்துக் கொண்டால் கூட முதல் இரண்டு பகுதிகளில் வந்த பின்னூட்டங்கள் மூன்றாம் பகுதிக்கு வரவில்லை....அதைப் போல, பெருவாரியான மக்கள் TRIVIAL எனக் கருதி, பெரிதும் ரசிக்கப்படாமல் போன படம் நீ.எ.பொ...இந்தப் படத்தை முதல் நாள் தியேட்டரில் பார்த்த பொழுது கலாய்த்துத் தள்ளி விட்டார்கள்..அதனால் படத்தின் உட்கூறுகளோடு பெரிதாக ஒன்ற இயலவில்லை...பின்னர் மீண்டும் பார்த்த பொழுது, கெளதம் ஸ்டைல் MAKING AND CONVERSATIONS தவிர்த்து விட்டு பார்த்தால் " இது காதலின் வேறு DIMENSION" எனத் தோன்றியது..


இந்தப்படம், வழக்கமான RANDOM EVENT படி அமைந்த காதலைப் பேசவில்லை..வருண்-நித்யாவின் வாழ்க்கையில் குழந்தை பருவம், மாணவர் பருவம் என்று இருவேறு பருவங்களில் "ஈர்ப்பு" மலர்ந்துள்ளது...நித்யாவின் பார்வையில், வருண் தான் முன்சொன்ன இரண்டு ஈர்ப்புகள் உடையக் காரணம்..படம் தொடங்கும் வேளையில் இருவரும் கல்லூரி பருவத்தில் இருக்கின்றனர்.."வானம் மெல்ல" பாடல் மூலம் முன்பு எழுந்த இரு ஈர்புக்களும் நமக்கு காட்டப்படுகின்றன..கிட்டதட்ட "குஷி" போல இருவரும் இறுதியில் சேரப்போகிறார்கள் என்று மனதளவில் பார்வையாளரைத் தயார் செய்து விடுகிறது இந்த காட்சிகள்..

படத்தின் இன்னொரு பரிணாமம்...காதலில் எழும் வர்க்க உரசல்கள்..வருண் நடுத்தர வர்க்கம்..கெளதமின் என்னய்யா படங்களைப் போல அல்லாமல், ஒரு அப்பட்டமான, COST BOUND, நடுத்தர வர்க்கம்..வருண் நித்யாவை கூட்டமான ஞாயிற்றுக்கிழமையில் நடுத்தர உணவகத்துக்கு அழைத்து செல்கிறான், வருண் அண்ணனின் பெண் பார்க்கும் படலத்தில் அவர்களது "வர்க்கம்" கேள்விக்கு உள்ளாகிறது..நித்யா, ஆஸ்திரேலியா, எடின்பரோ என டூருக்கு செல்ல, வருணால் ஏற்காடு, ஊட்டியே செல்ல முடிகிறது..கார் ஓட்டுவதில் கூட வருணுக்கு ஒரு INFERIORITY COMPLEX எட்டிப்பார்க்கிறது..அதனாலே, வருண் "வேலை" என்ற ஒன்றை தனது வாழ்வின் பிரதானமாகக் கருதுகிறான்..

நித்யா..உயர்தர வர்க்கம்..தனது உலகத்தை வருணுக்கு AFFIX செய்துக் கொள்பவள்..பின்னர் அவனது உலகில் தன்னைத் தவிர வேறு PREFERENCES ம் இருப்பதை அவளால் தாங்கிக் கொள்ள இயலவில்லை.."நான் உனக்காக என்னோட FRIENDS, CAREER எல்லாத்தையும் SACRIFICE பண்ணேன்..ஆனா நீ" என்ற EGO தான் படத்தின் PLOT POINTS..நித்யாவின் படி, வருணின் CORE PERSONALITY சுயநலமானது...தனது சுயநலத்துக்காக அவளது காதலை உதாசீனப்படுத்திகிறான் என்று அவளது EGO அவளை எச்சரிக்கும் நொடியில் தான் வருண் மீது கொண்ட "கண்மூடித்தனமான காதலைத்" தூக்கி எறிந்து "I HATE YOU" என்கிறாள்...மொட்டைமாடி வாக்குவாதத்தின் இறுதியில் இதைத் தான் கூறுகிறாள்..அடுத்து கடற்கரை ஓர வாக்குவாதத்தில், "இப்போ உன் LIFE-ல உள்ள குட்டி குட்டி BOX- களை எல்லாம் டிக் அடிச்சிட்டு, இப்போ இங்க வந்திருக்க..இப்போ இந்த BOX ல, என்ன எழுதிருக்கு வருண்..நித்யானா?? இல்ல கல்யாணம் பண்ணிக்க ஒரு பொண்ணுன்னா" என்று கேட்பதும் தான் படத்தின் CRUX..

மொட்டைமாடி வாக்குவாதம், கடற்கரை ஓர வாக்குவாதம் ஆகிய இரண்டில் எழும் தார்மீக EGO க்கள், வருண் கல்யாணத்தின் முந்தைய இரவில், நொறுங்கிப் பொய், அது விலக்கி வைத்திருந்த காதல் முழுமை நிலை அடைகிறது,,,இதுவும் "குஷி" பாணி EGO உடைதல் தான்...திரைப்பட பாணியில், இது சற்று DRY AREA..அதனால்தான், "குஷி"யில் மும்தாஜும், "சச்சினில்" பிபாஷாபாசுவும் இந்த பகுதியை உந்திச் செல்ல பயன்படுத்தப்பட்டிருப்பார்கள்..கெளதம் காதலை..அதன் " தூய வடிவத்தில்", அதன் நிறைகுறைகளோடு, ஒரு MICROSCOPE மூலம் அதன் வெளிப்பாடுகளைக் கடத்த முயன்று இப்படத்தில் வெற்றி பெற இயலவில்லை....மேலும், ஒரு சராசரி ரசிகனுக்கு வருணின் "INNER PSYCHE" ஐ EXPLICIT ஆக்கவோ, எதனால் CONFLICT எழுந்தது என தெளிவுற விளக்கவோ படத்தால் இயலவில்லை..முடிவும், வழக்கமான சினிமா ரீதி.."வருண்-நித்யா காதல் பயணத்தின் சில தருணங்கள்" என்று கெளதம் அதன் போக்கில் விட்டு விட்டார்..(இதை வெற்றிகரமாக செய்தவர் எஸ்.ஜே.சூர்யா.)

வருண், வழக்கமான கெளதம் பாணி MAD IN LOVE நாயகன் அல்ல..நித்யா, "ஜெஸ்சி" போல முரண்பாடுகள் நிறைந்த காதலியும் அல்ல..இதுதான் நான் ஆரம்பத்தில் சொன்ன TRIVIALITY..

0 comments: